⇰ To Index Page

Sadasiva Brahmendra சதாசிவ பிரம்மேந்திரர்

சதாசிவ பிரம்மேந்திரர் (sadasivabrahmendra) தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தியும், கருநாடக இசை அறிஞரும் ஆவார். [2]போதேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர். சோமசுந்தர அவதானி - பார்வதி இணையருக்கு சிவராமகிருஷ்ணன் எனும் இயற்பெயருடன் கும்பகோணத்தில் பிறந்தவர். போதேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியவர்களுடன் ஒரே குருகுலத்தில் வேதம் பயின்றவர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானம் பெற சந்நியாசம் மேற்கொண்டு உலகைச் சுற்றிவரலானார். பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு நூல் மூலம், சதாசிவ பிரமேந்திரரின் யோக சக்திகள் அறிய முடிகிறது. அட்டாங்க யோக சித்திகளை அடைந்தவர்
ஒரு ஜீவன், தக்க குருவை அடைந்தானானால், அவர் அருளால் அவரிடம் உள்ள ஸ்ரத்தையால், பக்தியால், அவனால் கரையேற முடியும். அறிவு துலங்கும்.
பாசி விலகும். மாயை அறுபடும். தேகம்தான் ஆத்மா என்கிற தேஹாத்ம புத்தி அகலும். விடா முயற்சியாலும், பயிற்சியாலும் உண்மையிலே தான்யார்? என்று அறிவான்.
அதற்கும் அவன் உடலுக்கும் என்ன உறவு என்று புலனாகும். இதுவே அவனை சத் சித் ஆனந்தமாக்கும்.
துக்கம் சுகம், துன்பம் இன்பம் எதுவும் நெருங்காமல் அவன் சமநிலையில் எப்போதும் நிலைப்பான். சுத்த சைதன்யநிலை ஆனந்த ஸ்வரூபத்தை அவனுக்கு கொண்டுவரும். ஆழ்ந்த அமைதியின் உருவே அவன்.
குருவின் கடாக்ஷம் பூரணமாக ஜீவன் மேல் இருக்கும் பக்ஷத்தில் ஆனந்த சாகரத்தில் அவன் மூழ்குவான்.
அவன் மனம் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, அனைத்து உலக விவகாரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு, எதில் எப்பொழுதும் இலயிக்க வேண்டுமோ, அந்த ஆத்ம சாக்ஷாத்காரத்தில் நிலைத்து நிற்பான். அவனது மாயை மறைகிறது. இத்தகைய ஜீவன்தான் பிரம்ம ஞானி.
குருவின் அருளால், ஜீவனுக்கு பரிபூர்ண ஆனந்தம் மட்டும் அல்ல அசைவற்ற ஆழ்ந்த அமைதி கிட்டுகிறது. அவனது ஹ்ருதயம் உலகியல் சம்பந்தப்பட்ட இன்ப துன்பங்கள் அறவே நீங்கி, சம நிலையில் ஆத்மாவோடு ஒன்றிய இயல்பு ஏற்படுகிறது.
அந்த ஆனந்த அனுபவத்தை தான் அடைந்தது போன்றே மற்ற ஜனங்களும் அடைய வேண்டி, அதை அனைவரும் அறியும் பொருட்டு ஸ்ரீ சதாசிவ பிரஹ்மேந்திரர் தன்னுடைய “ஆத்ம வித்யா விலாஸம்” என்ற பிரகரண கிரந்தத்தில் எடுத்துக் கூறுகின்றார்.

ஓம் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மணே நம;
கரூர் அருகே 12 கி.மீ தொலைவில் உள்ள நெரூரில் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்திராள்ஜீவசமாதி. அமைதியான சூழ்நிலையில் ஒரு சிவன் கோவில், அதனருகில் பிரம்மேந்திராளின் ஜீவ சமாதி.
ஸ்ரீ சதாசிவ பிரம்மம் கொடுமுடி அருகேயுள்ள அகத்தியம்பாறை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டு இருந்தபோது காவிரியின் திடீர் வெள்ளம் இவரை உருட்டிச்சென்று மண்ணில் புதைத்து விட்டது . காவிரியின் சீற்றம் அடங்கியதும் சதாசிவ பிரம்மத்தை சீடர்களும் ,மக்களும் தேட கிடைக்கவில்லை. பல காலம் கழித்து கட்டிடம் கட்ட மணல் தோண்ட வந்தவர்கள் ஆழமாக தோண்ட மண்வெட்டி புதைந்திருந்த சதாசிவ பிரம்மத்தின் தலையில் பட்டு காயமாகி ரத்தம் வந்ததும் மணல் எடுக்க வந்தவர்கள் ஓடிப்போய் ஊர் பெரியவர்களைகூட்டி வந்து சுற்றிலும் மணலை எடுத்து சதாசிவ பிரம்மத்தை உடம்பு சுத்தம் செய்து விட யாரிடமும் பேசாமல் அமைதியாக நடந்து சென்றாராம் .
கரூர் தான் தோன்றிமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி சிலையை வணங்கி ஜன ஆகர்ஷ்ண சக்கரம் எழுதி பூஜை செய்து அங்கு அமைத்து "வறுமையால் திருப்பதி செல்லமுடியாத பக்தர்கள் தான்தோன்றி மலையப்பரை வணங்கினால் திருப்பதி சென்று வந்ததிற்கு ஈடாகுமென அருளிச்சென்றார் . தன் நிலை மறந்தவாறு உடையில்லாமல் இறை தியானத்தில் அரசன் கொலு பட்டறையின் வழியே நடந்து செல்ல கோபப்பட்டு மன்னர் சதாசிவ பிரமத்தை அறிந்திராமல் அவரின் கையை வெட்டி விடகை துண்டானது கண்டு கொள்ளாமல் திரும்பி நடக்க மன்னர் மன்னிக்க வேண்டி கேட்டு நிற்க வெட்டிய கையை ஒட்ட வைத்து நடந்து சென்றாராம்.

கருநாடக இசையில் எளிய பாடல்களில் விளக்கியுள்ளார். அவைகளில் பிரபலமானவைகள்:
ஆனந்த பூரண போதகம் சச்சிதானந்தா - இராகம் சங்கராபரணம்
ஆனந்த பூர்ணா போதக சதகம் - மத்தியமாவதி
பஜரே கோபாலம் - ஹிந்தோளம்
பஜரே ரகுவீரம் -
பஜரே யதுநாதம் - பீலு
பிரம்மவைபவம் - நடனமாக்கிரியா
சேட்டா ஸ்ரீராமம்
சிந்தா நாஸ்தி கிலா
காயதி வனமாலி
பிபரே ராம ரசம்
பூர்ண போதகம்
ஸ்மாரவரம்

Bhajare Gopalam - பஜரே கோபாலம்
ராகம்: ஹிந்தோளம்
இயற்றியவர் : சதாசிவ பிராம்மேந்த்ரர்
பஜரே கோபாலம் மானச பஜரே கோபாலம்
பாஜகோபாலம் பஜிதகுசேலம் த்ரிஜகல்மூலம் டிதிசுதகாலம் ||
ஆகம சாரம் லோக விசாரம்
போக சரீரம் புவனாதாரம் ||
கதனகடோரம் கலுஷ விதூரம்
மதனகுமாரம் மதுசம்ஹாரம் ||
நாதமந்தாரம் நந்தகிஷோரம்
அதஷாநூரம் ஹம்சவிஹாரம் ||

பஜரே கோபாலம், மானஸ…………..
ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….
ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..
மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….
க்ரீடதி வனமாலி கோஷ்டே………….
பஜரே யதுநாதம் மானஸ…………..
ப்ரதிவாரம் மானஸ…………..
பிபரே ராம ரஸம்…………………
சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..
ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே
காயதி வனமாலி மதுரம்………………..

போதேந்திர சரஸ்வதி (Bodhendra Saraswathi, 1610-1692)

போதேந்திர சரஸ்வதி காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் 60வது பீடாதிபதியாவர். 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் விதேகமுக்தி அடைந்தவர். சதாசிவ பிரமேந்திரர் மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தவர்.

போதேந்திர சரசுவதி, கேசவபாண்டுரங்க யோகி - சுகுணா இணையருக்கு 1610இல் காஞ்சிபுரத்தில் புருசோத்தமன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர். ஆத்மபோதர் எனும் குருவால் பயிற்றுவிக்கப்பட்ட போதேந்திர சரசுவதி சுவாமிகள், இளம் வயதிலே சுருதி மற்றும் ஸ்மிருதி ஆகிய இந்து சமய வேத சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றார்.

போதேந்திர சரசுவதி சுவாமிகள், தனது முதுமைக் காலத்தில் காவேரி ஆற்றாங்கரையில் அமைந்த தஞ்சாவூர் பகுதியின் கோவிந்தபுரம் எனும் கிராமத்தில் வாழ்ந்தார். 1692ஆம் ஆண்டு புராட்டாசி மாதம் போதேந்திர சரசுவதி சுவாமிகள் யோக நிலையில் அமர்ந்து சீவசமாதியில் இருந்தார்.
Nara Contact terms