Non commercial web site of personal collections, available to every one. - By M.N.Amrith Kumar, Bangaluru
உன் பாதாம் பணிந்தேன் ஷபாரிஷனே
உன்னை கண்டேன் என்னை மறந்தேன் மணிகண்டனே
உன்னை கண்டேன் என்னில் ஜ்யோதி யானாய்
அக்கனமே உன்னை உணர்ந்தேன் ஷபாரிஷனே
உன்பார்வை ஒளியாக என்நெஞ்சம் அகலாக
என்னுள் நீ ஜ்யோதியாய் உருவானாய்
என்மோக புயல் வீச ஏனென்கிலா பய
நீ தந்த ஒளி மட்டும் நிலையானதே
நீ காட்டிய பாதையில் நானென்றும் செல்லாமல்
என் பாதையில் நான் சென்று கீழே விழுந்தேன்
நீ வந்து கை கொடுத்து என் சிறு மனதை மன்னித்தாய்
இனியென்றும் நீ காட்டின பாதையில் நான் செல்வேனே
இயற்கை எங்கும் முருகனைக் கண்டேன்
அன்பில் ஒளிந்த உன்னுருவைக் கண்டேன்
உன்னை நானும் உணர்தேன் என்னையே மறந்தேன்
உன்னில் என்னை கண்டேன் முருகா
பொருளை தேட முயல வில்லை
செல்வம் சேர்க்க ஆசை இல்லை
அருளை தேடி உன் பாதம் பட்ட
மேகம் தெளிந்த வண்ணன் போல
உன் அருள் மழையும் பொழிய
கல்லும் கனிந்து உருகக் கண்டேன்
நீல வானில் விடியோல் போல
எந்தன் உள்ளம் ஒளிர கண்டேன்
கரை சேர நான் ஆசை பட்டேன்
உன்னை பணிந்து விட்டேன்
உன்னில் கரைந்து விட்டேன்
உன்னில் நான் கலந்து விட்டேன்
என்றும் என்னில் விடியல் கண்டேன்